tamilnadu

img

விதொச தலைவர் ஆர். குமாரராஜா படம் கே. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருவாரூர், அக். 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வருமான மறைந்த தோழர் ஆர். குமாரராஜா படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கி கிராமத்தில் நடை பெற்ற இந்த படத்திறப்புக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலை மை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன் முன்னிலை வகித் தார். மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன், தோழர் குமாரராஜா படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார்..

முன்னதாக தோழர் ஆர்.குமாரராஜா நினைவுக் கொடிமரத்தில் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். நினைவு கல் வெட்டை விதொச மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம் திறந்துவைத் தார்.

சிபிஐ தேசியக்குழு உறுப் பினர் ஜி. பழனிச்சாமி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி உரையாற்றினர்.

சிபிஐ திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க. மாரிமுத்து, விதொச மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எம்.சேகர், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி. கோமதி மற்றும் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. தமிழ் மணி, கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எல். சண் முகம், மாவட்டக் குழு உறுப் பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத் தலைவர்கள், தோழர் குமாரராஜாவின் குடும்பத்தினர் பங்கேற் றனர்.