திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழிலிருந்த வகுப்புகளின் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மாநில மொழிகள் கூடுதல் மொழியாக மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழிலிருந்த வகுப்புகளின் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளிலும் வகுப்புகளின் பெயர் எழுதப்பட்டிருந்த நிலையில் தமிழ் எழுத்துகள் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.