tamilnadu

img

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?

மன்னார்குடி, ஆக.16- தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகள் உள்ளன.இக்கல்லூரிகளில் இளங்கலை இர ண்டாம் மற்றும்மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் முது கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் பாடங்கள் இணையவழியில்  நடத்தப்பட்டு வருகின்றன. இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூலை 21  முதல் 31 ஆம் தேதி  வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க  வேண்டும் எனவும் ஆகஸ்ட்  1 ஆம் தேதி முதல் 10  ஆம் தேதி வரை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கல்லூரி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. சுமார் 82 ஆயிரம் இடங்களுக்கு மூன்று  லட்சத்திற்கு  மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் கூறு கின்றன.  சில பல்கலைக்கழகங்கள்  மாணவர்களின் சே ர்க்கையை செப்டம்பர்  1 ஆம் தேதிக்குள்  முடித்துவிட வேண்டும் என அறிவித்துள்ளன.  

ஆனால் சான்றிதழ் பதி வேற்றம் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டாலும்  மாணவர்கள் சேர்க்கை அரசு கல்லூரிகளில் எப்போது தொடங்கி எப்போது முடிய வேண்டும் என கல்லூரி  கல்வித் துறையிலிருந்து இதுவரை எந்த வழிகாட்டுதல்க ளும் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணி க்கையை அந்த பள்ளியின் முதல்வர் கூட அறிந்து கொள்ள  முடியாத அவல நிலை உள்ளதாக கல்லூரிக் கல்வி வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன. . மேலும் குறிப்பிட்ட ஒரு  கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்து மாணவர்க ளின் மதிப்பெண் தரவரிசை பட்டியல்களை கல்லூரி நிர்வா கமும் மாணவர்களும் தெரிந்து கொள்ளமுடியாத அவல  நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள்  தேர்வு  செய்த  கல்லூரியில் விரும்பும் பாடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற தவிப்பில் ஏழை கிராமத்து மாணவர்கள்  உள்ளனர்.

தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவான செயல்பாடா?
அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதிக் கல்லூ ரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை துவக்கப்பட்டு நிறைவடை யும் நிலையில் உள்ளன. இது இப்பிரச்சனையை மேலும்  கடுமையாக்கி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால்  வாழ்வாதாரம் நொறுங்கிப்போன ஏழை நலிவடைந்த கிரா மப்புற மாணவர்களின் பெற்றோர்களும் பதற்றத்தின் உச்சத்தில் உள்ளனர். அரசு உயர்கல்வி மற்றும் கல்லூரி  கல்வித்துறையின் இந்த தாமதப்படுத்தும் செயல் உயர்க ல்வியில் தனியார் துறைக்கு ஆதரவாக வணிகச் சூழல் மறைமுகமாக உருவாக்கப்படுகிறதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாமதம் சமூக  ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சி  அடையச் செய்துள்ளது. தாமதமின்றி அரசு கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை  துவக்கப்பட வேண்டும். இதுதான் மாநிலம் முழுமையும் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

இணைய வழிக்கல்வியின் சோகம்
அரசுக்கல்லூரிகளில் பயில்பவர்களில் 90 விழுக்கா ட்டு மாணவர்கள் நலிந்த ஏழை கிராமத்து குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். இளங்கலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் இம்மாணவர்களுக்கு இணைய வழிக்கல்வி அன்றாடம் போராட்டமாக மாறி உள்ளது. ஒரு செமஸ்டருக்கு 450  மணி நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி 6 மணி நேரம். இதற்கு தேவையான ஒரு ஏழை மாண வனது குடும்ப வருமானத்தில் தரமான ஒரு ஆண்ட்ராய்ட் போன் பெறுவதிலேயே சோகம் துவங்குகிறது. அந்த ஆறு மணி நேரத்திற்கு இணையத் தரவளவு ( டேட்டா ) சராசரியாக 5 ஜி.பி. குறைந்தபட்சம் தேவைப்படுகிறது. அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி தொழில்நுட்பத்திற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காத சூழ்நிலையில் செல்போனுக்கான டேட்டாவை பெறுவதற்கு தனியார் நிறுவன சேவைகளை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது. சுமார் ஆயிரம் ரூபாயை ஒவ்வொருமாதமும் ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பிற்கும் கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஒரு குடும்பத்தில் இருவர் அரசுக்கல்லூரி மாணவர்கள் என்றால் இந்த சோகத்தின் அளவு எந்த அளவிற்கு உயரும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இதனால் தான் அரசுக்கல்லூரிகளில் சுமார் 40 விழுக்காடு மாணவர்கள் இணையவழி கல்வியிலிருந்து விலகிக் சென்றுவிட்டனர் என்றும் இது மேலும் உயரும் என்றும்  தகவல்கள் கூறுகின்றன. மத்திய அரசின் அரவணைப்பில் சமீபகாலத்தில் அமோக வளர்ச்சியடைந்துள்ள ஜியோ போன்ற தனியார் நிறு வனங்களுக்கும் சமூக பொறுப்புள்ளதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. இத்தனியார் நிறுவனங்கள் ஏழை  எளிய, நடுத்தர எல்லா இணைய வழி மாணவர்களுக்கும் சலுவை விலையில் டேட்டா வழங்க வேண்டும். இத னை கட்டாயப்படுத்தும் ஆணைகளை மத்திய மாநில அரசுகள் தாமதமின்றி உடனே பிறப்பிக்க வேண்டும். அல்லது இதற்கான மானியத் தொகையை அரசுகள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எல்லா இணைய வழி மாணவர்களுக்கும் இலவசர பென் ட்ரைவ் ஒன்றை அளிப்பதுடன் இக்கல்வி ஆண்டிற்கான இணைய வழி கல்வி விளக்கப் பொருள் மற்றும் பாடங்களை ஒட்டு மொத்தமாக முன்பே கொடுத்து விட வேண்டும். அப்போதுதான் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி பாதுகாக்கப்படும். அரசு இதை உணருமா? மாணவர் சேர்க்கை உடனே துவங்குமா? உயர்கல்வித்துறையும் மாநில அரசும் இனியாவது உறக்கம் கலைக்குமா?    பி.தட்சிணாமூர்த்தி