tamilnadu

img

துயரத்தில் இருக்கும் மக்களும் கொண்டாட்டத்தில் இருக்கும் கும்பலும்

திருவாரூர்:
உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள்கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கிப் போயுள் ளனர். அம்பானியின் அலுவலக அடிப்படை உதவியாளர்  முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை வர்க்க பேதமில்லாமல் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். கல்வி நிலையங்கள் செயல்பட
வில்லை. அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன.

மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏழாவது ஊரடங்கு சனிக்கிழமை முதல்(ஆக.1) அமலில் உள்ளது. மக்களின் துன்ப துயரங்களைப் பற்றி கவலைப்படாமல் பொருளாதார இடர்பாடுகளைகளைவதற்கான திட்டங்கள் ஏதும்இல்லாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆகஸ்ட் 5 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

இந்திய பிரதமர் மோடி அடிக் கல்லை நாட்டி ஆர்எஸ்எஸ்ஸின் திட்டத்தை நிறைவேற்றவுள்ளார். இதற் காக நாடு முழுவதிலிருந்தும் பல்வேறுஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவாரூரில் சனிக்கிழமை தியாகராஜன் சுவாமி திருக்கோவிலான கமலாலயத்திலிருந்து புனித நீரும், அரசலாற்று மண்ணும் எடுத்துச் செல்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். அதில் “ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா ஹீ ஜே” என்று உரத்த குரலில் முழக்கம் எழுப்பப்பட்டது. குகன்,சுக்ரீவன் போன்ற கீழ்த்தட்டு வர்க் கத்தைச் சேர்ந்தவர்களை தனது நண்பனாக ஏற்றுக் கொண்டதன் மூலம் ராமபிரான் சகோதரத்துவத்தை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து பாரதிய பண்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் தெரிவித்தார்.

மாயமான் வேடம் போட்டு மக்களைதிசைதிருப்பும் வேலையில் இவர்கள் இறங்கியிருப்பது தெரிய வருகிறது. சொல்லொண்ணா துயரத்தில் மக்கள் இருக்கும் போது கொரோனாவைக் காட்டி மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு இவர்கள் தங்களது அஜெண்டாவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த செயல்பாடு கிராமப் புற மக்கள்கூறுவதை போல “கிடப்பது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில் வை”என்ற பழமொழிக்கு ஏற்பத்தான் உள்ளது.