tamilnadu

img

போலி இ- பாஸ் தயாரிப்பு: கணினி மையத்திற்கு சீல்

திருவண்ணாமலை:
போலி இ-பாஸ் தயாரித்து மக்களிடம் விற்பனை செய்த கணினி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.திருவண்ணாமலை நகர், கட்டபொம்மன் தெருவில், ரோஸ் கம்ப்யூட்டர் பாயிண்ட் என்ற கணினி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கணினி மையத்தில் போலியாக பொது மக்களுக்கு இ-பாஸ் தயார் செய்து விற்பனை செய்துவருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ரோஸ் கம்ப்யூட்டர் பாயிண்ட் என்ற கணினி மையத்திற்கு விரைந்து சென்ற அலுவலர்கள், அங்கு சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் ரோஸ் கம்ப்யூட்டர் மையத்தை இழுத்துப் பூட்டி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் இந்த கம்ப்யூட்டர் மையத்தில் இ-பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது, யாருக்கெல்லாம் இ-பாஸ் விற்பனை செய்யப்பட்டது, இ-பாஸ் ஒன்றுக்கு என்ன விலை வசூலிக்கப்பட்டது என்பது குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.