திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சாட்டையால் சீனியர் மாணவர்கள் அடித்து, தாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவச் சொல்லியும், சார் என்றுதான் அழைக்க வேண்டும் என வற்புறுத்தியும் இன்னும் பல விதங்களில் மோசமாக ராகிங் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.