திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகேவெங்ஙானூரில் திருவோணத்தன்று காங்கிரஸ் கட்சியினரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் ஹக் முகம்மது, மிதிலாஜ் ஆகியோரது உடல்களுக்கு அமைச்சர்கள், ஏ.கே.பாலன், கடகம்பள்ளி சுரேந்தின், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தீவிர விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கேரளத்தில் திருவோணப் பொழுது விடிந்தது இரண்டு
இளைஞர்களின் படுகொலைச்செய்தியுடன். காலையிலேயே விசாரணைகள் முடிந்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு சடலகங்ளும்கொண்டு செல்லப்பட்டன. மாலை 4 மணிக்கு உடற்கூறாய்வு முடிந்தது. பின்னர் இருவரது வீடுகளுக்கும் சடலங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டன. வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களது சக ஊழியர்களான இருவரையும் காண வழியெங்கும் காத்திருந்து ஆவேச முழக்கம் எழுப்பி விடை கொடுத்தனர்.
முதலில் மிதிலாஜின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது பின்னர் வெம்பாலம் ஜும்மா மசூதி அருகில் கபர் அடக்கம் செய்யப்பட்டது. முகம்மது ஹக்கீமின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கபர் அடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் இரங்கல்
இரட்டைக்கொலைக்கு தலைமை வகித்தவர்களை கைதுசெய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் பிரனாயி விஜயன் கூறினார். படுகொலைக்கான காரணம்குறித்தும் பின்னணியில் செயல்பட்டவர்களை கணடறியும் வகையிலும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள முதல்வர் ஹக் முகம்மதுவுக்கும், மிதிலாஜுக்கும் அஞ்சலி தெரிவித்தார்.
6 குற்றவாளிகள் கைது
திருவனந்தபுரம் இரட்டைக்கொலையில் காங்கிரஸ் கட்சிஊழியர்களான ஷஜித், நஜீப்,அஜித், ஸதி, சஜீவ், சனல் ஆகியஆறு பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுடன் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அடூர் பிரகாஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார்.