திருவனந்தபுரம்:
கேரளத்தில் காங்கிரஸ் குண்டர்கள் இரண்டு டிஒய்எப்ஐ ஊழியர்களை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்தது காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் திட்டமிடப்பட்ட செயல் எனவும்,அதற்கு எதிராக புதனன்று கறுப்புநாள் அனுசரிக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏமாற்றமடைந்த காங்கிரஸ் தலைமை பல்வேறு வழிகளில் கலவரம் நடத்த முயன்று வருகிறது. வன்முறைகளும், கொலைகளும் நடத்தி பதட்டமான சூழ்நிலையைஉருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது வெங்ஙாரமூடு இரட்டைக்கொலை தெளிவுபடுத்துகிறது. இதற்கு எதிரானமக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் புதனன்றுமாநிலம் முழுவதும் கறுப்புநாளாக கடைப்பிடிக்கப்படும் எனகேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.