tamilnadu

img

தளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்

திருவள்ளூர்:
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் இருந்தாலும் மக்கள் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண் டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் கடந்த திங்கட் கிழமை முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பொதுமக்கள் வழக்கம்போல் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் அணிவகுத்தபடி செல்லும் காட்சியை நாம் காணமுடிகிறது.இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  1,000 படுக்கைகளை கொண்ட சிறப்பு வார்டுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன..மேலும் 1000 படுக்கைகள் வசதி கொண்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதன் எண்ணிக்கையை 2 ஆயிரம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவதியுறுவோருக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.இன்றைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் பொது மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.