திருத்தணியில் நடந்து சென்ற இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஒரு இளைஞர் நடந்து செல்லும்போது, 5 பேர் கொண்ட கும்பல் கைகளில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் துரத்திச் சென்று வெட்டிக் படுகொலை செய்தனர்.கொலை செய்யப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரழிந்தார்.
இந்நிலையில் கொலை செய்த அந்த கும்பல் திருத்தணி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தானாக சரணடைந்தனர்.அவர்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.