தேனி, ஜூன் 7- கம்பம் கோம்பை ரோட்டைச் சேர்ந்தவர் பசுபதி இவரது பேரன் அசோக்குமார் (28) பி.டெக் படித்துள்ளார். இவர் சிறு வய தாக இருக்கும்போதே பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித் தனியாக வசித்து வருகின்றனர்.இத னால் அசோக்குமார் பாட்டியிடம் வளர்ந் துள்ளார். பி.டெக் முடித்த அசோக்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். கொரோனா நடவடிக்கையால் சென்னையில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தனது சொந்த ஊரான கம்பத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தார். வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.மேலும் பல்வேறு இடங்களில் வேலை கேட்டும் கிடைக்கததால் விரக்தியடைந்த அசோக்குமார் ஞாயிறன்று அதிகாலை கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அரு கில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட் டிக்குச் படிக்கட்டு வழியாக மேலே ஏறி அங்கிருந்து குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர் வழ க்குப் பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.