tamilnadu

வருஷநாடு அருகே தார்சாலை இல்லாததால் பொதுமக்கள் அவதி

வருஷநாடு, ஜூலை 1- தேனி மாவட்டம் வருஷநாடு அருகே கோடாலியூத்து, அண்ணாநகர் கிராமங்கள் உள்ளன. எலுமிச்சை, பீன்ஸ் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்தக் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. மண் சாலை தான் உள்ளது. இந்தச் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் ஆட்டோ, வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் சென்றுவர முடியவில்லை. எனவே இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங் களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய விளைபொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்தக் கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும்  தற்போது வரை நடவடிக்கை இல்லை. சேதமடைந்துள்ள மண் சாலையும் கூட சீரமைக்கப்படவில்லை.  எடுத்து கோடாலியூத்து, அண்ணாநகர் கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.