தேனி, ஜூன் 14- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் தற்காலிக காவலர்களாக திம்மநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிவ ராமன் (40) என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ஆண்டி(37) என்ப வரும் வேலை செய்து வருகின்றனர். இக் கோயிலின் அருகில் மதுரை -போடி அகல ரயில் பாதை பணிக்காக மலையை குடையும் பணி நடைபெற்றுவருகிறது.இதில் சனிக் கிழமை மாலை மலையை குடைவதற்காக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் பாறை களுக்கு வெடி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவில் காவலர்கள் இரு வரும் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். எதிர் பாராதவிதமாக பாறையில் வெடித்து சித றிய கற்கள் அவர்கள் இருவரும் மீதும் விழுந்தது.இதில் படுகாயமடைந்த இரு வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர்.தலையில் பலத்த காயம டைந்த ஆண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆண்டி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் அகலரயில் பாதை ஓப்பந்ததாரர்கள் சேலம் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஈகில் எர்த் மூவின் உரிமையாளர், சேலம் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சுப்பன், அதே பகுதியை சேர்ந்த பெரிய சாமி மகன் பொன்னரசன், தேனி, உத்தம பாளையத்தை சேர்ந்த மன்னர் மகன் ஸ்ரீதர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.