tamilnadu

img

ஆண்டிபட்டி அருகே கோவில் சுவற்றில் பழங்கால ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு....

தேனி:
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி அம்மச்சியாபுரம். இங்கு  வேட்டைகருப்பசாமி கோவில் உள்ளது. பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவில் தற்போது மிகவும் சிதிலமடைந்து கிடக்கிறது.கோவிலைப் புனரமைப்பதற்காக அதை  இடிக்கும் பணி வியாழனன்று தொடங்கியது. அப்போது வடக்குப்பக்க சுவற்றை இடித்தபோது அதில் உள்ள குழிவான பகுதியில் ஓலைச்சுவடிகள் இருப்பது தெரிய வந்தது.இதில் வட்டெழுத்துக்கள் முறையில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. குடும்பர், பாண்டியர் வரலாறு, சிவவழிபாடு, திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட குறிப்புகள் இருப்பதுதெரியவந்துள்ளது. இது குறித்து கோயில் பூசாரி ஈஸ்வரன் கூறுகையில், பல நூறு ஆண்டுகளானாலும் சுவடிக்கு பாதிப்பு ஏற்படக் கூடாதுஎன்பதற்காக சுவற்றின் ரகசியபகுதியில் இவை வைக்கப்பட்டி ருந்தது. தற்போது நாங்கள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளோம். தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.