தேனி, செப்.19- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தலைமறைவாகியுள்ள மாண வரை பிடிக்க ஆண்டிபட்டி டிஎஸ்பி.தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பணியாற்றுபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரி யில் இளங்கலை மருத்துவப் பட்டப் ப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலை யில் இவர் நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வின் போது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது . இது குறித்து மின்னஞ்சலிலும் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு இரண்டுமுறை புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் துணைத்தலைவர், பேராசிரியர்கள் அடங்கிய குழு விசாரணை மேற்கொ ண்டது. இதில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து க. விலக்கு காவல்நிலையத்தில் மாண வர் உதித்சூர்யா மீது புகார் கொடுக்கப் ்பட்டது. அந்த மாணவர் மீது கூட்டுச் சதி 120(பி), மோசடி செய்தல்-419, ஏமாற்றுதல் 420 ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி காவல்துறை கண்காணிப் பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தற்போது குற்றம்சாட்டப் பட்ட மாணவர் கல்லூரியில் இல்லாத தால் அவர் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சென்னை யை சேர்ந்த உதித்சூர்யா என்பவர் குறித்து, அசோக்கிருஷ்ணன் என்பவர் இம்மாதம் 11 மற்றும் 13 ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் கொடுத்துள் ளார். இதன் அடிப்படையில் நடை பெற்ற விசாரணையில், நீட்தேர்வு எழு திய மாணவரும், தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவரும் ஒரே நபர்தானா என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இது சம்பந்தமாக மேல் நட வடிக்கை எடுப்பது குறித்து மாநில மருத்துவக்கல்லூரி இயக்குன ரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது என்று கூறினார். இந்நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் தலைமை யிலான பேராசிரியர் குழுவினர் சென்னை மருத்துவக்கல்வி இயக்குன ரகத்திற்குச் சென்றுள்ளனர். சம்பந்தப் பட்ட மாணவர் குறித்த ஆவணங்கள், புகார், கல்லூரி விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றையும் உடன் கொண்டு சென்றுள்ளனர். உதித்சூர்யா இருக்கும் இடம் தெரிந்தபிறகுதான் ஆள்மாறாட்ட த்தில் ஈடுபட்டவர், இது போன்ற முறை கேட்டில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ள னரா மற்ற விபரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
ஆள் மாறாட்ட புகாரை தொடர்ந்து சென்னையில் உள்ள உதித்சூர்யா வீட்டிற்கு காவல்துறையினர் விசார ணை நடத்தச் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. காவல்துறை யினரின் விசாரணையிலிருந்து தப்பிக்க மாணவரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் உதித்சூர்யா வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரித்தனர். (ந.நி.)