tamilnadu

img

பெரியகுளத்திலிருந்து பீகாருக்கு 256 பேர் அனுப்பி வைப்பு

தேனி, மே 20- தேனி மாவட்டம் பெரிய குளத்திலிருத்து 256 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள் .ஊரடங்கு உத்த ரவு அமலில் உள்ளதால் வட மாநில தொழிலாளர்கள் வேலை யின்றியும், வருமானம் இன்றியும் பாதிக்கப்பட்டனர்.  இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி க்கை வைத்தனர். அவர்களை சொந்த ஊருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு செய்தது.  

பீகார் மாநிலத்தை சேர்ந்த 256 தொழிலாளர்கள் பெரிய குளம் அருகே உள்ள மேரி மாதா கல்லூரியிலிருந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு பேருந்து மூலமும், திண்டுக்கலிருந்து சிறப்பு ரெயிலிலும் புறப்பட்டுச் சென்றனர். இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய் யப்பட்டன. சொந்த மாநிலம் செல்லும் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் முக கவசம் போன்றவை வழங்கப் பட்டன. அவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகி யோர் வழியனுப்பி வைத்தனர்.