தேனி, மே 21- நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர் களுக்கு தேனி மாவட்ட தமுஎகச சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. கொரோனா நோயின் தீவிரம் காரண மாக நாடு முழுவதும் ஊரடங்கு வீடடங்கு நிலை நீடித்து வரும் நிலையில் பலதரப் பட்ட மக்களும் அடிப்படை வசதிகளுக்கு அவதியுற்று வருகின்றனர். நாட்டுப்புற கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் அவர்களது நிலையும் மிக வும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மே மாத காலங்களில் தொடர்ச்சியாக நடை பெறும் திருவிழாக்களும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கொண்டாட்டங்களும் மற்ற விழாக்களும் அவர்களுக்கு வாழ்வாதரத் திற்கான நிதியை அளிப்பதில் கடந்த காலங்க ளில் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றன. ஏற்கனவே போதிய வருமானம் இல்லா மல் அவதியுறும் அக்கலைஞர்களின் குடும் பங்கள் ஏப்ரல் மே மாத ஊரடங்கினால் வயிற்றுப்பாட்டுக்கே மிகவும் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இக்குடும்பங்களுக்கு உதவும் வகை யில் தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மே 20 அன்று முதற்கட்டமாக மாவட்டம் முழு வதும் உள்ள கலைஞர்களுக்கு மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி தலைமையில் அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிஉதவியோடு 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் ஆயி ரம் மதிப்புள்ள மளிகைச் சாமான்கள் கொண்ட தொகுப்பையும் கொரோனோ நோய்த் தாக்குதலில் இருந்து அவர்களைப் பதுகாத்துக் கொள்ள உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் விதமாக அரசு பரிந்துரைத்துள்ள ஹோமியோபதி மருந்துகளையும் அக்கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள அனவருக்கும் வழங்கி யது.
தேனி மாவட்டத்தில் கம்பம் உத்தம பாளையம் சின்னமனூர் போடிநாயக்கனூர் தேனி அல்லைநகரம் ஆண்டிபட்டி பெரிய குளம் பகுதிகளில் வசிக்கும் கலைஞர் களுக்கு உதவி வழங்கிய இந்நிகழ்வில் தமு எகச கம்பம் கிளையின் தலைவர் ஹோமியோ மருத்துவர் இன்பசேகரன், துணைச்செயலா ளர் முரளிதரன் தமுஎகச சின்னமனூர் கிளை நிர்வாகிகள் புலவர் மு.பாலசுப்பிரமணி, ஆ.முத்துகுமார், கவிஞர் தங்கேஸ், பெரிய குளம் கிளை நிர்வாகிகள் கவிஞர் யாழ் தண்விகா, அருண்பாண்டியன், ஆண்டி பட்டி கிளை நிர்வாகிகள் எழுத்தாளர் மாதா, மணிகண்டன் கிராமியக் கலைஞர்களின் நிர்வாகிகள் கலைநன்மணி எஸ்.கே.பாலு, கலைமுதுமணி எ.செல்லச்சாமி தமுஎகச தேனிமாவட்டத் தலைவர் கவிஞர் இதயநிலவன், மாநில செயற்குழு உறுப்பினர் ம.காமுத்துரை மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.மோகன்குமாரமங்கலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ராம மூர்த்தி, கவிஞர் தங்கப்பாண்டியன் ஆகி யோர் பங்கேற்றனர்.
உதவிகள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளியுடனும் பங்கேற்றனர். உதவி பெற்ற கலைஞர்கள் தங்களுக்கு விரைவில் வேலை கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டுமெனவும் நலவரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் அரசு உதவி வழங்க வேண்டுமெனவும், ஏற்க னவே அரசு வழங்கிவரும் உதவிகள் போதாது எனவும் கூறினர்.