தேனி
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு துணை முதல்வர் சார்பாக தலா ரூ 1000 வீதம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது .
தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இரவு பகல் பாராது அயராது உழைக்கும் 4346 தூய்மை பணியாளர்களின் பணிகளை பாராட்டும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தலா ரூ.1000- வீதம் மொத்தம் ரூ.43,46,000- மதிப்பீட்டில் வழங்கும் பொருட்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் காசோலையாக வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக தலா ரூ.1,000- வீதம் காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சிப்பகுதியில் பணிபுரிந்து வரும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப்பணியாளர்கள் என மொத்தம் 300 பணியாளர்களுக்கு தலா ரூ.1,000- வீதம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போடிநாயக்கனூர் நகராட்சி நகர் நல அலுவலர்ப.ராகவன், பொறியாளர் குணசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.