tamilnadu

img

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் பகுதிகளுக்கு சீல்... தேனி எஸ்பி அறிவிப்பு

தேனி 
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு  ஏற்பட்டவர்கள் வசிக்கும் 5 பகுதிகளுக்கு  சீல்வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," தேனி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. புதன்கிழமை  ஒரே நாளில் 20பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளான போடி-அம்மாகுளம், புதூர், சுப்புராஜ்நகர், பள்ளிவாசல்தெரு, பூங்கா பகுதி , பழைய அஞ்சல் அலுவலகம், டிவிகேகே.நகர், உத்தமபாளையம்-கோட்டைமேட்டுத்தெரு, கம்பம்-கம்பம்மெட்டு ரோடு, சின்னமனூர்-வடக்குத்தெரு, பெரியகுளம்-அழகர்சாமிபுரம், தென்கரை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ளவர்கள் வெளியேறவும், பிறநபர்கள் இப்பகுதிகளுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. 50 வீடுகளுக்கு ஒரு குழு அமைத்து மருந்து, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.