tamilnadu

img

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை 65 அடியை எட்டும் வைகை அணை

தேனி, நவ.1- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வைகை அணைக்கு 4000 கன அடி நீர்வரத்து உள்ளது .71அடி உயர முள்ள அணையின் நீர்மட்டம் 65 அடி யை நெருங்குகிறது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இரவு பகலாக பெய்து வரு கிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேக மலை, வருசநாடு உள்ளிட்ட வனப்பகு திகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வரு கிறது. இதன்காரணமாக வைகை ஆற் றில் நீர்வரத்து தற்போது அதிகரித் துள்ளது. இதுதவிர தேனி மாவட்டத் தில் போடி கொட்டக்குடி ஆறு, கம்பம் சுருளி ஆறு ,பெரியகுளம் வராக நதி ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து உள்ளது. கடந்த சில வாரங்களாக வினாடிக்கு சராசரியாக 2 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் வியாழன் காலை 9 மணிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 65 அடியை நெருங்கி வருகிறது. வைகை அணை நீர்மட்டம் முறையே 66 அடி மற்றும் 68.50 அடியை எட்டும் போது முதல் 2 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணை நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது 3-வது எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும். தற்போது பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை நீர்மட்டம் 128அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4ஆயி ரத்து 837அடியாகவும், வெளியேற்றம் ஆயிரத்து 640கனஅடியாகவும் இருக்கிறது. பெரியகுளம் சோத்துப்பாறை அணை, தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி யதை தொடர்ந்து சண்முகா நதி அணை யும் நிரம்பி வழிந்தது .  தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி அணை உள்ளது. 52.5அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு மேகமலை பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது.  கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக இந்த அணையின் நீர்பிடிப்புப்பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாய் அதிகரித்தது. இதனால் அணை முழுக்கொள்ள ளவை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது அணை நிரம்பிய தால் இந்த நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
குளிக்க தடை
சுருளி அருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவி ஆகிய அருவி களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.