கடமலைக்குண்டு, ஜூன் 25- தேனி மயிலாடும் பாறை அருகே 64 ஏக்கர் பரப்பள வில் செங்குளம் கண்மாய் அமைந்துள்ளது. போதிய பரா மரிப்பு இல்லாததால் கண்மாயின் பெரும்பாலான பகுதி யில் மரம், செடிகள் முளைத்துள்ளது. தனிநபர்கள் ஆக்கி ரமிப்பும் உள்ளது. செங்குளம் கண்மாயை தூர்வாரி நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குடிமரா மத்து திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி செலவில் கண்மாய் தூரும் பணி தொடங்கியது. ஆண்டிபட்டி உதவி செயற்பொறியாளர் கணேச மூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயை பார்வையிட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறு கையில் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணி முடிந்து விட்டது. அடுத்த கட்டமாக மூல வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது என்றனர்.