தேனி, ஜூலை 2- மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனி டம், தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தொலைபேசியில் பேசி யதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏல விவசாயிகள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற்று செல்லலாம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா காரணமாக, கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு செல்ல அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆரம் பத்தில் இ-பாஸ் பெற்று ஏலத்தோட்டங்க ளுக்கு சென்று வந்த தமிழக விவசாயி களுக்கு தற்போது இ-பாஸ் மறுக்கப்படுவ தால் ஏலச்செடிகளை பராமரிப்பதிலும், ஏலக் காய்களை விற்பனைக்கு பதிவதிலும் சிரமம் உள்ளது. அனுமதி மறுக்கப்படுவதால் 30 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள், 1,500 ஜீப் ஓட்டுநர், உரிமையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர்.
இந்தநிலையில் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்ட ஏலதோட்டங்களுக்குச் செல்ல அனு மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது . அதனைத்தொடர்ந்து கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், கேரள மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஏலத் தோட்டத் தொழிலாளர் களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார். “இது தொடர்பாக கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருப்பதாகவும். இதன டிப்படையில் இடுக்கி மாவட்ட ஆட்சிய ருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட் டுள்ளதாகவும் இ-பாஸ் மூலம் அனுமதி பெற்று விவசாயிகள் செல்லலாம்” என கேபாலகிருஷ்ணனிடம் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே தேனி மாவட்ட ஏல விவசாயி கள் இ-பாஸ் மூலம் விண்ணப்பித்து ஏலத்தோட்டங்களுக்கு சென்று வரலாம்.