தேனி, மே 23- பிரசவம் அதிகம் பார்க்கப் படும் கம்பம் அரசு மருத்துவ மனையில் கொரோனா நோயா ளிகள் அனுமதிக்கப்ட்டுள்ளதால் அங்கு சிகிச்சை பெரும் கர்ப்பி ணிகள், மருத்துவர்கள் கலக்கம டைந்துள்ளனர். கொரோனா தொடர்பான சிகிச்சையை தேனி அரசு மருத்துவ மனைக் கட்டுப் பாட்டில் அனுமதிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செய லாளர் டி.வெங்கடேசன் தெரி வித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:- தேனி மாவட்டத்தில் க.விலக் கில் உள்ள அரசு மருத்துவக் கல் லூரியின் கட்டுப்பாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, செவிலி யர் பயிற்சி பள்ளி, தேனி மன நல ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச் சைக்கு 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவருகிறது, தேனி மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக் கட்ட 96 பேர் தேனி அரசு மருத் துவ கல்லூரியில் தங்கி சிகிச்சை பெற்று இது வரை 50 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் சிகிச்சை பெற்று வருவ தாக தெரிகிறது . இந்நிலையில் சின்னமனூர் அருகே முத்துலாபுரம் ஊராட்சி யைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 7 வயது ஆண், 3 வயது பெண் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு கெரோனா தொற்று ஏற்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் கம்பம் அரசு மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் கள் மாவட்ட ஆட்சியர் உத்தர வின் பேரில் அனுமதிக்கபட்டுள்ள னர். கம்பம் அரசு மருத்துவமனை யை பொறுத்தமட்டில் சீமாங் தரம் உயர்த்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் சிறப்பான முறையில் பிரசவம் பார்க்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை யில் படுக்கை வசதி கொண்ட மருத்துவக்கல்லுரிக் கட்டுப்பாட் டில் அனுமதிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் எண் ணிக்கை குறைவாக உள்ள மருத்துவனையில் கொரோனா சிகிச்சைக்கு தனியாக மருத்து வர்களை நியமிக்கவும், அவர்கள் தனியாக குடியிருப்புகளில் வசிக்கவும் தகுந்த ஏற்பாடு செய்யாமல் கம்பம் மருத்துவ மனையில் கொரோனா பாதிக்கப் பட்ட குழந்தைகளை அனு மதித்தது கண்டனத்திற்கு உரிய தாகும். இதன் காரணமாக மருத்துவ மனைக்கு வரும் புறநோயாளி கள் குறைந்ததோடு, உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்ற வர்கள் வெளியேறத்தொடங்கி வருகின்றனர் .இதனால் கர்ப்பிணி களும், மருத்துவர்களும் கலக்க மடைந்துள்ளனர். எனவே பாதிக் கப்பட்ட குழந்தைகளை தேனி அரசு மருத்துவ மனைக் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவமனை க்கு அனுப்ப நடடிக்கை எடுக்க வேண்டும்.