tamilnadu

img

தனி மணல் குவாரி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் ஆக.20-  வேலை இழந்து வருமான மின்றி வாழ்விழந்து வறுமையோடு போராடும் மாட்டு வண்டி தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்திடவும் லாரி டிராக்டர், டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பகிரங்கமாக நடந்து வருகிற மணல் கொள்ளையை தடுத்து பிழைப்புக்காக மணல் எடுக் கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்குப் போடு வது கைது செய்து சிறையில் அடைப் பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிடக் கோரியும் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி அடை யாள அட்டை வழங்க கோரியும் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் தலைமை ஏற்றார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் பி.என்பிபேர்நீதிஆழ்வார் மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவ பாரதி விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் முருகன் கடுச்சம்பாடி தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கும்ப கோணம் தெற்கு பகுதி பொறுப்பா ளர்கள் பாஸ்கர் ஜி.முருகன் கும்ப கோணம் வடக்குப் பகுதி கே. செந்தில் உலகநாதன் திருவிடை மருதூர் பகுதி ஆர்.குணசேகரன் எம்கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏரா ளமான மாட்டு வண்டி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். நிறை வாக கும்பகோணம் கோட்டாட்சிய ரிடம் கோரிக்கை மனுவை வழங்கி னர்.