tamilnadu

img

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரி கோரி போராட்டம்

தஞ்சாவூர், செப்.17- தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டையில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக மாட்டுவண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி யை அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி, சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆற்றிலிருந்து மணல் எடுத்து பிழைப்பு நடத்திவரும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண் டும். மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்குகளைப் போடுவதைத் கைவிடவேண்டும்.  மாட்டு வண்டிகளின் டயர்களை வெட்டி சேதப்படுத்தும், அராஜகப் போக்கை கைவிட வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு என தனி யாக நலவாரியம் அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார் பில், செவ்வாய்க்கிழமை அன்று பட்டுக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.  இப்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என். பேர் நீதி ஆழ்வார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி, தஞ்சை மாவட்ட மீன்  பிடித் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.சுப்பிரமணியன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகி கள் சக்திவேல், ரமேஷ், கே.சோம சுந்தரம், பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  காத்திருப்புப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தொழிலாளர்கள் ஆவேசமடைந்து முழக்கங்களை எழுப்பினர். இதை யடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம், காவல்துறை ஆய்வா ளர் பெரியசாமி ஆகியோர், சிஐடியு நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில், “கோரிக்கைகள் குறித்து சார்-ஆட்சியர் மூலம், மாவட்ட ஆட்சி யரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனி மணல் குவாரி அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட் டம் கைவிடப்பட்டது. முன்னதாக பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வட்டாட்சியர் அலு வலகத்திற்கு கோரிக்கை முழக்கங் களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.