tamilnadu

குடிநீர்க் குழாயில் கலந்த கழிவு நீர் 25 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

தஞ்சாவூர், ஜூலை 5-   தஞ்சையில் குடிநீர்க் குழாயில், கழிவு நீர்  கலந்ததால், குடிநீரை அருந்திய 25 பேருக்கு  வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. தஞ்சாவூர் தொல்காப்பியர் நகரில் 4  மற்றும் 5 ஆம் தெருவில், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகு திக்கு மாநகராட்சி சார்பில், விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் சில நாள்க ளாக தண்ணீர் கலங்கலாக வந்ததுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல, மக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தியுள்ளனர். அந்த தண்ணீரை குடித்த 16 பெண்கள் உள்பட 25 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.  இதுகுறித்து, தஞ்சை மாநகராட்சி அலுவ லர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த னர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை மகர்நோ ன்புசாவடி தாய்-சேய் நல விடுதிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதே பகுதி யில் சுகாதாரத் துறையினரும் முகாம் அமை த்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவப் பரி சோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.  அப்பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக, குழாய் அமை க்கும் பணியின் போது, அருகில் இருந்த கழிவு  நீர் குழாய் சேதமடைந்தால், குடிநீரில் கழிவு  நீர் கலந்திருந்தது தெரியவந்தது. இதைய டுத்து, அதை மாநகராட்சி பணியாளர்கள் சீர் செய்தனர்.