tamilnadu

கிராம உதவியாளர் பணியிடம் 

 தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் தாலுகா பிள்ளையார்நத்தம், குருங்களூர், மருங்குளம் ஆகிய கிராமங்களுக்கான கிராம உதவி யாளர் காலி பணியிடங்களுக்கு கடந்த 4 முதல் 17ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தஞ்சா வூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்க லாம்.  காலிப் பணியிட கிராமம் மற்றும் அருகில் உள்ள கிரா மங்களில் வசிப்பவர்களுக்கு, இன சுழற்சி முறையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நிய மனம் மூலம் பணி நிரப்பப்பட உள்ளது. கல்வித் தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்து இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்தி ருக்க வேண்டும். தகுதியுள்ள மனுதாரர்கள் தாலுகாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் தனியே அனுப்பப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.