தஞ்சாவூர் ஜூலை.25- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பேரா வூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் மாண வர்களுக்கு இலவச சீருடை வழங்கப்ப ட்டது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலரும், பள்ளித் தலைமை யாசிரியருமான ஜெயபால் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கத் தலை வர் பொறியாளர் கே.குட்டியப்பன், செயலா ளர் ஆர்.குமார், பொருளாளர் பொறியாளர் சரவணன் ஆகியோர் 100 மாணவர்களுக்கு, ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பள்ளிச் சீருடை களை வழங்கி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் லயன்ஸ் நிர்வாகிகள் இ.வீ.காந்தி, வி.எம்.தமிழ்ச்செல்வன், கே.கே. சுப்பிரமணியன், எஸ்.வைரவன், சுப்பையன், கணேசன், சரபோஜி கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் பழனிகுமார் வரவே ற்றார். லயன்ஸ் சங்கப் பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.