tamilnadu

சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் ஊழல் நடைபெறவில்லை கும்பகோணம் ஒன்றிய தலைவர் மறுப்பு

கும்பகோணம், ஜூன் 6-   தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிருமி நாசினிகள் 90 லட்சம் ரூபாய்க்கு கொள்மு தல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக கடந்த வாரம் ஒன்றியக்குழு கூட்ட த்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கும்பகோணம்  ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்திரி அசோக்குமார் செய்தியாளரை  சந்தித்து தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் சுகாதார பயன்பாட்டிற்கு  உள்ள குளோரின் போன்ற 7 பொருட்களை அரசு நிர்ணயித்த விலையை விட குறைவான விலைக்கே தரமான சுகாதார பொருட்களை அரசு விதிமுறைக்கு  உட்பட்டு கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொள்முதல் நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றியத்தில் கொரானா பாதித்த சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டாலும் கும்பகோணம் எல்லைப் பகுதியான நீலத்தநல்லூர் சோதனைச்சாவடியில் சுகாதார பொருட்கள் தேவை அதிகம் வேண்டும் என்றும் ரூ. 3 கோடிக்கு  கொள்முதல் செய்ய ஆணை இருந்தும் தற்போது நிதி  நிலைக்கு ஏற்ப மட்டுமே குறைந்த அளவில் ஜிஎஸ்டி உள்பட ரூ. 90 லட்சத்தி ற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேர்மையான திமுக நிர்வாகிகளை பார்த்து ஊழல் நடைபெற்றதாக உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் மீது நீதி மன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் ஒன்றிய குழு தலை வர் காயத்ரி அசோக் குமார் தெரிவித்தார்.