tamilnadu

img

கால்பந்து போட்டியில் வென்ற அணிகள்

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. கரம்பயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 அணிகள் கலந்து கொண்டன.  இதில் அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி 4- 3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர் அணி இரண்டாமிடம், கண்டனூர் அணி மூன்றாமிடம், பட்டுக்கோட்டை அணி நான்காமிடமும் பிடித்தது. இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி வீரர்களை பாராட்டினர்.