tamilnadu

img

தேச ஒற்றுமைக்கு அடையாளமாக விளங்கும் ரயில்வேயை தனியார்மயமாக்கக் கூடாது மக்களவையில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 19- தேச ஒற்றுமைக்கு அடையாளமாக விளங்கும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் முன்னாள் நிதி துறை இணை அமைச்சரும் தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினருமான எஸ். எஸ்.பழனி மாணிக்கம் வலியுறுத்தி பேசினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவா தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசியதாவது, “ரயில்வே துறை அமைச்சர்கள்  மற்றும் துணை அமைச்சரை கேட்டுக் கொள்வது, இந்தியாவின் பெருமை மிகு அடையாளமாக திகழ்கின்ற ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு துணை நிற்காதீர்கள்.  ஏற்கனவே தரைவழி போக்குவரத்தில் பெரும்பாலான சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. ஏர் இந்தியா வும் இப்போது விற்பனையில் இருக்கி றது.  இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து, வான்வழி போக்கு வரத்து, கடல் வழி போக்குவரத்தில், மிஞ்சி இருப்பது ரயில்வேதுறை ஒன்று தான். ஒரு காலத்தில் இந்தியாவின் ஒற்றுமைக்கு அடையாளமாகத் திகழ்ந்தது ரயில்வே துறைதான் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே அதனை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

ரயில்வேக்கு முன்பு இருந்ததை போல தனி பட்ஜெட் இருந்தால் தான் ரயில்வே துறையை மேம்படுத்த முடியும், ஏற்படுகின்ற இழப்புகளை தவிர்க்க முடியும், என்று கடந்த காலத்தில் எனக்கு இந்தத் துறையில் இருந்த அனுபவத்தைக் கொண்டு தெரிவிக்க விரும்புகிறேன்.  ஒவ்வொரு முறையும் ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன்னால் கடந்த காலங்களில் அந்தந்த வட்டா ரங்களில் இருந்த தென்னக ரயில்வே, மேற்கு ரயில்வே, வட மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே போன்றவற்றில் அதில் இணைக்கப்பட்டு இருக்கின்ற நாடாளுமன்ற தொகுதிகளின் உறுப்பி னர் அடங்கிய கூட்டத்தை ரயில்வேத் துறை அமைச்சர் நடத்துவார்.  அப்போதுதான் அந்த பகுதியில் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை, ரயில்வேவும், ரயில்வே துறையை நிர்வகிக்கும் அமைச்சர்க ளும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அண்மைக் காலத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கிற நண்பர்கள் அந்தக் காரியத்தை செய்வதில்லை. இதில் கூட கவனம் செலுத்தாவிட்டால் எப்படி ரயில்வேயை காப்பாற்ற முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ரயில்வேயை பரா மரிப்பதற்கு சம்பந்தப்பட்ட தொழிலா ளர்களை நியமிக்கும் போது, ரயில்வே துறையில் துப்புரவு பணியாளர்கள் தொடங்கி பொதுமேலாளர் வரை பணியாற்றுவது என்றால் ஒரு பெருமை உண்டு. அண்மைக்காலமாக நிரந்தரமான தொழிலாளர்களை, அலு வலர்களை நியமிப்பதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் ஒப்பந்தத் தொழிலா ளர்களாகவே நியமித்தால் அந்தத் துறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு அரசாங்கத்திற்கு இல்லை என்றுதான் பொருள்படும்.  ஒரு பொருளை பாதுகாத்து பராமரித்து கையில் வைத்துக் கொள்ளும் என்ற எண்ணம் இருந்தால் தான் அதனை துறக்க வேண்டும் என்ற மனப்பான்மை நமக்கு இல்லாமல் போகும். விற்றுவிடலாம் விற்றுவிட லாம் என்று ஒரு பொருளை நினைத்தால், அதனை காப்பாற்ற வேண்டிய எண்ணம் வராது.  எனவே ரயில்வே துறையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை, அமைச்சர்களும் அர சாங்கமும் மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ரயில்வே துறையில் ஊழியர்களை, அதிகாரிகளை நியமிக்கும்போது முன்பெல்லாம் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய மாநில மக்களுக்கு பெரும்பான்மையான வாய்ப்புகள் கிடைக்கும். 

இப்போது அண்மைக் காலமாக ரயில்வே துறையில் நியமிக்கப்படுகிற ஊழியர்களை, அதிகாரிகளை பார்க்கிற போது பிராந்திய சமநிலை இல்லாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் இருக்கிற ரயில் நிலையங்களில், ரயில்வே தொழிற்சாலைகளில் முன்பெல்லாம் தமிழர்கள் நிறைந்து இருப்பார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக பல்வேறு மாநிலங்க ளைச் சேர்ந்தவர்களும் கலந்து இருப்பார்கள்.  ஆனால் இப்போது அண்மைக் காலமாக எல்லா மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், எண்ணிக்கை ரயில்வே துறையில் குறைந்து வருகிறது. அதற்கான நியாயமான காரணங்களை கண்டுபிடித்து, தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். ரயில்வே துறையில் அண்மைக் காலமாக நீண்டதூர விரைவு ரயில் வண்டிகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆனால் அந்தந்த மாநிலத்தில் இருக்கக் கூடிய மக்கள் ஏழை எளியவர்கள் குறுகிய தூர ரயில்களை அந்தந்த மாநிலத்திற்குள், அல்லது அவர்க ளுடன் தொடர்புடைய அண்டை மாநிலத்திற்கு அதிகமான ரயில்களை இயக்கினால் தான் அந்த ரயில்கள் அந்தந்த மாநிலத்திற்கு பெரும்பாலும் பயன்படக்கூடும். 

நான் வசிக்கிற தஞ்சாவூர் வழியாக தினந்தோறும் இரவு, ஊரில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு ஒரு வண்டி நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகிறது. ஆனால் புகழ்பெற்ற தஞ்சாவூரில் இருக்கிற எங்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. ஆகவே இதை ரயில்வே துறை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  அதேபோல் இப்போது வருகின்ற வண்டிகளில் எல்லாம் முன்பதிவு அற்ற பெட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியாவில் இருக்கிற மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 சதவீதம் பேர் விவசாயிகள். அவர்கள் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு பயணிக்க முடியாது. அவர்களுக்கு ஏற்படுகின்ற அவசர காரியங்களில் உட னடியாக பயணத்தை மேற்கொள்வ தற்கு, அவர்களுக்கு முன் பதிவற்ற பெட்டிகளின் எண்ணிக்கையை கூட்டினால் தான் ஏழை எளியவர்கள் ரயில் வண்டிகளில் பயணிக்க வாய்ப்பாக இருக்கமுடியும்.  தமிழ்நாட்டிலும் கடந்த ஐந்து, ஆறு, ஏழு ஆண்டுகளாக அறிவிக்கப் பட்ட திட்டங்கள் பல தொடங்கப்ப டாமல் இருக்கிறது. தொடங்கப்பட்ட திட்டங்கள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. நான் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

குறிப்பாக தஞ்சாவூரில் தமிழ்நாட்டில் இந்தியாவில் மிகப் பழ மையான தொடர்வண்டி பாதைகளில் சென்னை - ராமேஸ்வரம் தொடர் வண்டிப்பாதை பழமையானது. ஏறத்தாழ 150 ஆண்டுகள் தொடங்கி யதிலிருந்து, ரயில்வே துறையில் 140 ஆண்டுகளுக்கு மேலானது. இந்தி யாவின் புகழ்பெற்ற புகை வண்டிக ளில் என்றழைக்கப்பட்ட விரைவுவண்டி தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணச்சீட்டுகளை வாங்கும் வசதியை கொண்டு இருந்தது. ஆனால் புகைவண்டிப் பாதை மீட்டர்கேஜிலி ருந்து பிராட்கேஜூக்கு மாற்றப்பட்டது. இதனை ஒரு காலக்கெடுவுக்குள் முடியுங்கள்.  ஏனென்றால் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பத்தாண்டுக்கு மேலாக ஒரு வழித்த டத்தில், பயணிக்காமல் இருந்தால் அந்த வழித்தடத்தில் இருக்கும் நகரங்கள் தங்கள் பழைய செல்வாக்கை இழந்து விடும். நான் சொல்லுகிற அந்தப் பாதை ஒவ்வொரு 40 கிலோ மீட்டரிலும் ஒரு நகராட்சி உண்டு. தொடக்க காலத்தில் புகை வண்டிகளை அறிமுகப்படுத்தியபோது பயணிக ளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத் தார்கள். ஆனால் அண்மைக்காலமாக சரக்கு ரயில்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.  அப்போது அந்த வழியில் விருத்தாசலம் வழியாக திருச்சி வழியாக மதுரைக்கு ஒரு ரயில் பாதை தொடங்கப்பட்டது. அது சரக்கு ரயில் போக்குவரத்திற்கானது. இந்தப் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுகிற 10 ஆண்டுகளில் அந்த வழி யாகச் சென்ற ரயில்களின் எண்ணிக்கை எல்லாம் ரத்து செய்யப்பட்டது. 

மாற்றாக சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த பாதையில் அறிமுகம் செய்யப்பட்டு இன்றைக்கு கால அவசியத்தை, குறுகிய காலத்தில் பயணிப்பதற்காக இன்று எல்லா வண்டிகளும் சரக்கு ரயில் பாதையில் செல்கிறது. மனிதர்கள் அதிகமாக இருக்கும் பாதை குறைந்து விட்டது. ஆகவே ஒரு பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியதற்கு பிறகு அந்தப் பாதையில் கடந்த காலத்தில் என்னன்ன ரயில்களை எல்லாம் இயக்கினீர்களோ அவற்றையெல்லாம் மீண்டும் இயக்குவது உங்கள் தார்மீகக் கடமை என்று நினைவில் கொள்ளுங்கள்.  ரயில்வே துறை என்பது, அரசாங்கத்தின்  எந்த துறையும், கடந்த காலத்தில் ஒரு குடிமகன் அனுபவித்த உரிமைகள் எதையும் இழந்துவிடக்கூடாது. புதிதாக நீங்கள் ஒரு சலுகையை யாருக்கும் வழங் குங்கள். ஆனால், கடந்த காலத்தில் ஒரு குடிமகன் அனுபவித்த உரிமை கள் எதையும் இப்போது இழந்து விடக்கூடாது. 

அதே சலுகையை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். குறிப்பாக தொடங்கப்பட்ட பாதையில் முடிக்கப்படாதது என்று சொன்னது,  திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலானது. இந்த அவையில் 5 பேர் தொடர்பு கொண்டுள்ள அந்த தொடர்வண்டிப்பாதை,  ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மயிலாடு துறையில் இருந்து காரைக்குடி அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக அது கழட்டி போடப்பட்டது. ஏறத்தாழ ஓராண்டு காலம் ஆயிற்று. 

பாதை பணிகள் முடிவுற்று, ஆனால் ஓராண்டு காலமாக பட்டிக்காட்டு சிறுவன் மிட்டாய் கடையை வேடிக்கை பார்ப்பது போலவே இருக்கிறது. ரயில்வே லைன் இருக்கிறது. ஆனால் ரயில் இல்லை. இவ்வழியில் 74 க்கு மேற்பட்ட ரயில்வே கேட், கேட்கீப்பர்கள் இருந்தனர்.  ரயில்வே துறையின் புதிய கொள்கைப்படி ஆளில்லாத கேட் இருக்கக்கூடாது. தஞ்சாவூர் பகுதி அது கடற்கரையை ஒட்டிய பாதை. சாலைக்கு அடியிலே செல்கிற பாதையைப் போட்டால், மழைக் காலத்தில் தண்ணீர் வந்துவிடும். உப்புநீர்.... கடல் நீர் ....

மேம்பாலம் போட்டால் அந்த ரயில்வே துறையின் புதிய கொள்கைப் படி ஆளில்லாத கேட்கக்கூடாது. மேம்பாலம் போட்டால் அந்த பகுதியில் அதற்கான வரவு செலவு வரு வாய் இருக்காது ஆனால் ரயில்வே லைனை மாற்றுவதற்கு முன்னாலே ரயில்வே துறை அதைப்பற்றி ஒரு கொள்கை முடிவை எடுத்திருக்க  வேண்டும்.  ஒரு வருட காலமாக நாங்கள் 5 உறுப்பினர்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இந்த ஐந்து உறுப்பினர்களும், இந்த தொகுதி மக்கள் எங்களைப் பார்க்கிறார்கள். நாங்கள் ரயில்வே துறை அமைச்ச ரைப் பார்க்கிறோம். அவர்கள் அதிகாரிகளைப் பார்க்கிறார்கள். இன்னும் அதற்கான தீர்வு கிடைக்க வில்லை. 

ரயில்வே பொது மேலாளர் போன வாரம் ஜூன் மாதத்தில் எப்படியும் ரயிலை விட்டு விடுகிறேன் என எங்க ளுக்கு வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அதனை என்று நிறைவேற்றி தரவேண்டும். அதைப் போலவே தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து அரியலூர், திருவாரூரிலிருந்து,  மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை, ஆகிய தொடர்கள் பாதி தொடங்கப்பட்ட நிலையிலும்,  புதிதாக தொடங்கப்படாமல் அறிவிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. அதைப் பற்றியும்  நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.  குறுகிய தூரங்களை உடைய சிறிய நகரங்களுக்கு இடையில் 8 அல்லது ஏழு பெட்டிகளை உள்ளடக்கிய டெமோ ரயில்களை, தென்னக ரயில்வே மூலம்  தமிழ்நாட்டில் அதிகமாக இயக்குவதன் மூலம் ரயில்வே துறைக்கு அதிகமாக வருவாயை நீங்கள் பெற முடியும். தமிழ்நாட்டில் டிக்கெட்டில்லா பயணம் என்பது குறைச்சல். எனவே வசதிகளைப் பெருக்குவதற்கு நீங்கள் மனம் வைக்க வேண்டும். 

நாட்டில் இருக்கக்கூடிய  ரயில்வே பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சா லைகளுக்கும், என்ஜினை உற்பத்தி தொழிற்சாலைகளும், முதலாளித்துவ நாடுகள் எல்லாம் துணைக்கு வராத போது சோசலிச உதவியோடு உரு வாக்கப்பட்டவை.  ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் வரலாற்றுச் சிறப்பு உண்டு. நீங்கள் உண்மையிலேயே ரயில்வேத் துறையை  காப்பாற்றுவதற்கு உறுதி பூண்டிருந்தால், நமது நாட்டில் உற்பத்தி ஆகிற ரயில்வே என்ஜின்களுக்கும், ரயில்வே பெட்டிக ளுக்கும்  உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பும், நன்மதிப்பும் உள்ளது.  ரயில்வே துறையை ஒரு தனிப்பட்ட நான்கு அல்லது ஐந்து முதலாளி களுக்கு விற்றுவிடாதீர்கள் ரயில்வே துறையின் கௌரவத்தை காப்பாற்ற வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.