tamilnadu

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி திருவிடைமருதூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கும்பகோணம், ஜூன் 10- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பேரூராட்சியில் செயல் அலுவலர்  சிவலிங் கம் உத்தரவின்பேரில் நோய் தொற்று பரவா மல் இருக்க போர்க்கால அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நிரந்தரப் பணியா ளர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாகப் பணியாற்றி வந்தனர்  இந்நிலையில் பேரூராட்சியில் பணி யாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு சிஐடியு பல கட்ட போராட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்க ளுக்கு சட்ட கூலியாக ரூபாய் 385 வழங்க உத்தரவிட்டார். ஆனால் திருவிடைமருதூர் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூபாய் 285 கூடுதலாக 50 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவித்த  கூலியான 385 முழுமையாக வழங்கவேண்டுமென திரு விடைமருதூர் பேரூராட்சி அலுவலகம்  முன்பு ஜூன் மூன்றாம் தேதி புதன்கிழமை அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

போராட்டத்தில் தஞ்சை மாவட்ட சிஐடியு துணைத்தலைவர் ஜீவபாரதி மாதர் சங்க  மாவட்ட குழு உறுப்பினர் அறிவு ராணி சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி கோவிந்தராஜ் தூய்மைப் பணியாளர்கள் கவிதா சீலா உள்ளிட்ட நிரந்தர பணியா ளர்களும் கலந்து கொண்டனர். பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் போராட்டக் குழுவி னருடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுமை யான சம்பளம் இம்மாதம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது  இந்நிலையில் போராட்டத்தின் வெற்றி யாக திருவிடைமருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் உறுதி அளித்தது போல் அனைத்து தூய்மைப் பணியாளர்க ளுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு சம்பளத்தையும் வழங்கினார். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறியபோது எங்க ளின் நியாயமான கோரிக்கையை சிஐடியு முன்னின்று நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என தெரிவித்தனர்.