tamilnadu

img

அதிகாரிகள் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை  மின்கம்பி அறுந்து விழுந்து வயலில் மேய்ந்த 5 மாடுகள் பலி 

தஞ்சாவூர், மே 14- பூதலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்த தில், வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயிர் தப்பினர்.  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோட்ட ரப்பட்டியில், அறுவடை முடிந்த விவசாய நிலங்க ளில், விவசாயிகள் சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தனர். அப்போது திடீரென்று மின் கம்பி அறுந்து விழுந்ததில், பீட்டர், ராணி, அம்புரோஸ், ஆரோக்கியராஜ், பிரான்சிஸ் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.  இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் என்பவர் முன்னெச்சரிக்கை யாக, ஓடிச்சென்று மின் இணைப்பை துண்டித்தார். இதனால் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

தகவலறிந்த மின்வாரிய அதிகாரி கள், காவல்துறையினர் அப்பகுதிக்கு உடனடி யாக சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். இதில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 5 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கூறுகையில், “பூதலூர் வட்டாரத்தில் கொட்டரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மின்கம்பங்கள் பழுதடைந்தும், மின்கம்பிகள் வலுவிழந்தும் உள்ளது. இதுகுறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் மின்வாரிய அதி காரிகளிடமும் இதுகுறித்து தகவல் அளிக்கப் பட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பும் இதே போல் வெண்டயம்பட்டியில், மின்கம்பி அறுந்து விழுந்ததில், வீட்டருகில் குளித்துக் கொண்டிருந்த இருவர் மின்சாரம் பாய்ந்து, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மனித உயிர்களுக்கு ஏதும் ஆபத்து இல்லை. இப்பகுதி யில் 45 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பிகளே பெரும்பாலும் உள்ளது. அவற்றை உடனடியாக புதிதாக மாற்றித் தர வேண்டும். பசுமாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்” என்றார். சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.