tamilnadu

மத்திய அரசின் கொரோனா கால நிவாரண அரிசி எங்கே? - சிபிஎம் கேள்வி

கும்பகோணம், ஜூலை 9- கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு நபர் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ அரிசி  வழங்க உத்தரவிட்டது. கீரனூர் ஊராட்சியில்  அந்த அரிசி எங்கே என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.  இதுகுறித்து திருவிடைமருதூர் தெற்கு  ஒன்றிய செயலாளர் பழனிவேல் கூறுகையில்,  கொரோனா கால ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள், கிராம வாசிகள் உட்பட பல ரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசுக்கு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய தின் பேரில் நபர் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ அரிசி  இலவசமாக வழங்க உத்தரவிட்டது.  ஆனால் தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் தாலுகா கீரனூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் இலவச அரிசி பெற்று வந்தனர்.  இக்கிராமத்தில் நடுத்தர மற்றும் ஆதிதிரா விடர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

ஆனால்  கீரனூர் ஊராட்சியில் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசால் வழங்கப்பட்ட நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி இதுவரை வழங்கப்பட வில்லை.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட கும்பகோ ணம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு  அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட ரேசன் கடையில், விற்பனையாளரிடம் கேட்டால்  இதற்கான அரிசி கடைக்கு வரவில்லை என  தெரிவிக்கிறார். இதனால் மத்திய அரசால் வழங்கப்பட்ட கீரனூர் ஊராட்சி மக்களுக்கு உரிய அரிசி  எங்கே போனது என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இத்திட்டம் நீர்த்துப்போ கும் அளவில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து வருகிறார்கள். குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கப்படவேண்டிய அரிசி வழங்க ப்பட்டதாகவே ஆவணங்களில் பதிவு இரு க்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு  செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையேல் பொதுமக்களை திரட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூலை 10  அன்று இலவச அரிசி கிடைக்கும் வரை முற்று கைப் போராட்டம் நடத்துவோம் என்றார்.