தஞ்சாவூர், ஜூலை 7- சிஐடியு தலையீட்டை அடுத்து தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதிய நிலுவை பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி யில் நூற்றுக்கணக்கான ஒப் பந்த தொழிலாளர்கள் குடிநீர் பிரிவில், எம்.எஸ்.ஜி இன்ப்ரா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் வழங்கப் படாமல் நிலுவையில் இரு ந்து வந்தது. இதையடுத்து சிஐடியு சார்பில் பல கட்டங்க ளாக போராட்டம் நடைபெற் றது. கடந்த ஜூன் 20 அன்று மாநகராட்சியை முற்றுகை யிட்டு சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் நிறுவன உரிமையாளர் விஜயராஜ் சம்பள நிலுவையை வழங்க முன்வந்தார். 3 மாத சம்பளம் தலா 18 ஆயிரம் வீதம், 24 பேருக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராஜா, குடிநீர் சங்க செயலாளர் ஜெயப்பிர காஷ் ஆகியோர் முன்னிலை யில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. சம்பள பாக்கியை பெற்றுத் தந்த மைக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் கூறுகையில், “தமி ழக அரசும், மாவட்ட நிர்வாக மும் தலையிட்டு, வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள 24 தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் வேலை பெற் றுத் தர வேண்டும். தொழி லாளர்களிடம் பிடிக்கப்பட்ட இஎஸ்ஐ., பிஎப்., ஆகிய வற்றை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண் டும். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகாமல் மதுரைக் கிளை உயர்நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் நடை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.