tamilnadu

img

ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தஞ்சை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பண்டாரவாடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அங்குள்ள மருத்து கையிருப்பு, நோயாளிகளின் பதிவேடு, அலுவலர்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார்.   பொதுப் பணித்துறை மூலமாக பழுதடைந்த கட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், ஊரக வளர்ச்சித் துறை மூலமாக சுற்றுப்புறத்தை தூய்மை செய்திடவும், டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.