tamilnadu

img

லேப்டாப் வழங்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 கும்பகோணம்: 2017-18 ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகர செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி. அரவிந்த்சாமி மாவட்ட குழு உறுப்பினர் விக்னேஷ் நகர குழு உறுப்பினர் மகாராஜா, அருண் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.