தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னணி ஊழியர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சா. கோதண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் ஆ.ரெங்க சாமி வரவேற்றார். மாநிலச் செய லாளர் உ.சண்முகம் துவக்கவுரை யாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவிந்த ராஜ் வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் மு. பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் கே. பாஸ்கரன் நன்றி கூறினார். கூட் டத்தில், சங்க வளர்ச்சி, எதிர் காலத் திட்டம், கடந்த காலங்க ளில் நடைபெற்ற போராட்டங் கள், சந்தித்த பிரச்சினைகள், அவற் றிற்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டன.