தஞ்சாவூர், ஜூன் 15- கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வந்த, வராத தொழி லாளர்கள் அனைவருக்கும் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். பணி செய்யும் தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க ஏது வாக குறைந்தபட்ச தொழிலாளர்க ளையே வேலைக்கு வரச் சொல்ல வேண்டும். பணிக்கு வரும் ஊழியர்க ளுக்கு முகக்கவசம், சானிடைசர், பாதுகாப்பு உபகரணங்கள் தினமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கிளை மேலா ளர்களிடம் மனு கொடுக்கும் போ ராட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது. தஞ்சாவூர் விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனையில் தொமுச நிர்வாகி எட்வின் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு கிளைச் செயலாளர் பழனி வேல், தொமுச செயலாளர் ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு அரசுப் போக்குவரத்து முருகேசன், ஏஐடியுசி துரை.மதி வாணன், பொதுச் செயலாளர் சுந்தர பாண்டியன், சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் வெங்கடேசன், விரைவுப் போக்குவரத்து கழக சிஐடியு துணைத் தலைவர் பரத்ரா ஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதே போல் தஞ்சை புறநகர் கிளை பணிமனையில் சிஐடியு மத்திய சங்கத் தலைவர் பி.முருகன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகர் பணிமனை கிளை 1, 2 ஆகிய இடங்களில் சிஐடியு மத்திய சங்க இணைச் செயலாளர் எஸ்.ராமசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு செயலாளர் எஸ்.சந்திரசேகரன், முருக.சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.