தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் திருஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலையில் விவசாயி களின் பெயரில் ரூ.360 கோடி வங்கி கடன் வாங்கி ஏமாற்றிய ஆலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தம்புசாமி, செயலாளர் பி.எம்.காதர்உசேன், கரும்பு விவசாயி கபிஸ்தலம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம், டி.ரவீந்திரன் கூறுகையில், தஞ்சா வூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகா திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் தாலுகா கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த இரு சர்க்கரை ஆலை யிலும் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் அரவை செய்த கரும்புக்கான பாக்கித் தொகை ரூ.82 கோடியை இதுவரை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியும் இது வரை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கவில்லை.
இதற்கிடையில் இவ்விரு ஆலை நிர்வாகமும், விவசாயிகள் கரும்பை பதிவு செய்யும் போது, அவர்களிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு அதனை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.360 கோடி கடனை ஆலை நிர்வாகங்கள் பெற்றுள்ளது. இந்ததொகை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை.இந்நிலையில் வங்கிகளிலிருந்து கடந்த சில மாதங்களாக அசலும், வட்டியும் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு விவசாயி பெயருக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நாங்கள், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
மேலும் கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலையிலும் விவசாயி கள் பெயரில் வங்கியில் ரூ.80 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம.தியாகராஜனை கைது செய்தனர்.
தற்போது தஞ்சாவூர் மாவட்டத் தில் ரூ.360 கோடியை வங்கியில் வாங்கி கரும்பு விவசாயி களை ஏமாற்றியுள்ள ஆலையின் உரிமை யாளரை ஆட்சியர் கிரி மினல் நடவடிக்கைக்கு உட்படுத்தி, வங்கியில் பெற்றத் தொகையை ஆலை நிர்வாகமே செலுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், ஆலை நிர்வாகம் இதுவரை வழங்காமல் உள்ள கரும்புக்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை வேண்டும் என்றார்.
கபிஸ்தலம் கரும்பு விவசாயி க.ராமகிருஷ்ணன் கூறியது, நான் ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வருகிறேன். அந்த கரும்பை திருஆரூரான் சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் எனக்கு கார்ப்பரேசன் வங்கியின் கும்பகோணம் கிளை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நான் ரூ.23 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியோடு சேர்த்து ரூ.28 லட்சத்தை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் வங்கியிலிருந்து எந்த ஒரு கடனும் பெறவில்லை. ஆனால் கரும்பை பதிவு செய்த போது,சர்க்கரை ஆலை ஊழியர்கள் பல்வேறு படிவங்களில் என்னிடம் கையெழுத்தை வாங்கி அதனை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்றிருப்பது தெரியவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னைப் போல ஏராளமான விவ சாயிகளும் ஆலை நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டுள்ளோம். நாங்கள் வாங்காத கடன் தொகையை, ஆலை நிர்வாகமே உடனடியாக செலுத்த வேண்டும்’’ என்றார்.