தஞ்சாவூர் செப்.1- தஞ்சையில் இரு தினங்களுக்கு முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 86 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயனிடம் ரூ43 ஆயிரத்து 80, கண்காணிப்பாளர் மீனாம்பாள், கணக்காளர் ராமசாமி அறையில் இருந்து ரூ40 ஆயிரத்து 640, முதுநிலை வரைவாளர் வீரமணியிடம் இருந்து ரூ24 ஆயிரத்து 220 மற்றும் 7 இடைத்தரகர்களிடம் இருந்தும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கண்காணிப்பாளர், கணக்காளர், முதுநிலை வரைவாளர், இடைத்தரகர்கள் ஹரிஹரன், விஜயராஜ், முத்துக்குமார், ராஜேஷ், கோகுல், வெங்கட்ராமன், செம்மனச்செம்மல் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படை க்கப்பட்டது.