சேலம், பிப். 2- குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். மத்திய பாஜக அரசு இந்திய இறை யாண்மைக்கு எதிராக கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதி வேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் மும்முனைத் தாக்குதல் களை எதிர்த்து மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் கோட்டை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சுபாஷ், கலையமுதன், நாசர்கான் (எ) அமான், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், விசிக மாநகர செயலாளர் ஜெயச்சந்தி ரன், இமயவரம்பன், மாநகரநிர்வாகி வேலு நாயக்கர், மதிமுக செயலாளர் ஆனந்தராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயபிரகஷ், தமுமுக ஜவாஹிருல்லா அணி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது, தமு முக ஹைதர் அலி அணி செயலாளர் சையத் மூசா, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி டேவிட் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக களம் காணும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற னர். ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில், திமுக பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போத்தன், வீர பாண்டியர் நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன், சிபிஎம் ஒன்றிய செய லாளர் அரியாக்கவுண்டர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மநேமக அப்துல்அக்கீம், ஜாககான், ரபுதீன்பாஷா திராவிட கழக ஒன்றிய தலைவர் பெ.சௌந்தரராஜன், உள் ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகி கள் திரளாக கலந்து கொண்டனர். எடப்பாடி ஒன்றியம், சித்தூரில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்தை சித்தூர் ஊராட்சி மன்ற தலை வர் நாகராஜன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் என்.நல்ல தம்பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மு.பெரி யண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், எடப் பாடி ஒன்றியம் முழுவதும் வீடுவீ டாக சென்று ஒருலட்சத்து ஐம்பது ஆயிரம் கையெழுத்து பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இளம்பிள்ளை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு இடங்க ணசாலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலா ளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காவேரி தலைமையில் கையெ ழுத்திட்டு துவக்கிவைத்தனர். இதில், கழக நிர்வாகிகள் பச்சமுத்து, அன்ப ழகன், மாணிக்கம், நாகேந்திரன், செல்வம், மகேந்திரன், பாஸ்கர், பெரியசாமி, கந்தசாமி, அறிவழகன், முத்து, பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஒன்றியம், கொக்கராயன் பேட்டை யில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் யுவராஜ், மாவட்ட பொரு ளாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வா கிகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமா னோர் கலந்துகொண்டனர். நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு திமுக முன்னாள் மத்திய அமைச்சர் செ.காந்திசெல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, பிரதேசக்குழு செயலாளர் பி.ஜெய மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.குழந்தான், நகர செயலாளர் ந.தம்பிராஜா, மதிமுக வழக்கறிஞர் அணி தலைவர் பழனி சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல், வேலகவுண்டம்பட் டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் தங்க வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அன்மணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில குழு உறுப்பினர் பெரியசாமி வேல்முரு கன், திமுக மகளிரணி செயலாளர் ஜெயமணி மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, இன்பசேகரன் எம்.எல்.ஏ, காங்கி ரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயந்தி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் யாசின் தென்றல், மாநில பிரதிநிதி சாதிக் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவாஜி, ஜமாதே இஸ்லாம் மாவட்டத் தலைவர் அஸ்வக், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் முஸ்தாக், சிறுபான்மைக் குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதகை
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு திமுக மாவட்ட செயலாளர் ப.முபாரக் தலைமை வகித்தார். உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எல்.சங்கரலிங்கம், ஜெ.ஆல் தொரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மாவட்ட செயலாளர் போஜராஜ், மதி முக மாவட்ட செயலாளர் அட்டாரி நஞ்சன், விசிக கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.வி.கிரி, கே.ராஜேந்திரன், வி.மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். திமுக நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கையெ ழுத்து இட்டனர். கூடலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு, திமுக பாண்டியராஜன், விசிக மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கடம்பூர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுகவின் நிர்வாகி ராமலிங்கம் தலைமை வகித்தார். திமுக டி.கே காளி யப்பன், மகேஷ், பழனிசாமி, சிபிஐ ராம சாமி, சிபிஎம் மலை வட்டார செயலா ளர் சி.துரைசாமி, தாளவாடி 7ஆவது வார்டு கவுன்சிலர் எம்.மாதேஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கையெ ழுத்திட்டனர்.