தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டத்தில், கொ ரோனா தொற்று பரவலை கட்டுப்ப டுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தேவை க்கேற்ப அவரச ஊர்தியை (ஆம்பு லன்ஸ்) கூடுதல் எண்ணிக்கையில் பய ன்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு அனு ப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: “கொரோனாத் தொற்று கடுமை யாக பரவி வரும் சூழ்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களை உடனடியாக சிகி ச்சை மையத்தில் தனிமைப் படுத்து வதற்கு போதுமான அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) வசதி இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது வரை பரந்து விரிந்த தஞ்சை மாவட்டத்தில், மாவட்டம் முழுவதற்கும் மூன்று அவசர ஊர்தி கள் (ஆம்புலன்ஸ்) மட்டுமே இருப்ப தாக சொல்லப்படுகிறது. இதனால் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் தொற்று ஏற்பட்டவர்கள் அதன் பரவும் அபாயம் புரியாமல் சாதாரணமாக உலவி வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தஞ்சையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் முக்கிய பொறு ப்பாளர்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக தெரிகிறது. அதோடு அவர்கள் நூற்றுக்கும் அதிக மான மாணவர்களிடமும், பெற்றோ ர்களிடமும் நேரடியாக கல்வி கட்ட ணம் வசூலிக்கும் பணிகளில் ஈடுபட்டு ள்ளதாக தெரிய வருகிறது. இவரோடு தொடர்புடைய நபர்களுக்கு நோய் பரவும் அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தி மருத்துவமனை யில் சிகிச்சை பெறவில்லை என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர், பர்மா பஜார் பகுதி யில் பிரபல செல்போன் மற்றும் எல க்ட்ரானிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில், வேலை பா ர்க்கும் ஊழியர் ஒருவருக்கு கொ ரோனா நோய் தொற்று இருப்பதாக தெரிகிறது. இதனால் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என்கிற நிலையும் உள்ளது. இது குறித்து வாட்ஸ் அப்பிலும் செய்தி பரவ லாக வெளியாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கொரோனாத் தொற்று பரவாமல் தடுத்திட பார பட்சமின்றி அனைத்து நடவடிக்கை களையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அவசர ஊர்தி எண்ணிக்கையை குறைந்த பட்சம் ஒன்றியத்திற்கு ஒரு வாகனமாவது ஒதுக்கப் படவே ண்டும். அதோடு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும், ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொ ள்ளப்பட வேண்டும். மேலும் நோய் பர வாமல் இருப்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொ ள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.