tamilnadu

img

சாக்கடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, மே 4-அவிநாசி அடுத்த அம்மாபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக சாக்கடை வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட 8ஆவது வார்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் அண்ணாநகரிலிருந்து அம்மன் திருமண மண்டபம் வரை முறையான சாக்கடை வசதியில்லை. மேலும் சாக்கடை நீர் அப்பகுதியில் குட்டை போல் தேங்கி காட்சியளிக்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பூண்டிபேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணமாக மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் சாக்கடை வசதி வேண்டி வலியுறுத்துகின்றனர்.