தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் வாலிபர் சங்க கிளைத் தலைவராக ஆர்.பசுபதி, செயலாளராக பி.சுதன், பொருளாளராக ஒய்.மணிகண்டன், துணைத் தலைவர்களாக எஸ்.விஷ்வா, ஜெ.ஜான்பாண்டி யன், துணைச் செயலாளர்களாக கே.அருண் குமார், எஸ்.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் புதிதாக 50-பேர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட னர். கூட்டத்தில், “ஏரிப்புறக்கரையில் உள்ள பகுதிகளில் நீர் தேங்கி கொசுக்கள் அதிக மாகி உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கிராம ஊராட்சி நிர்வாகம் உடனடியாக ஏரிப்புறக்கரை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். ஏரிப்புறக்கரையில் இருந்து கீழத்தோட்டம் வரை செல்லும் தார் சாலை மிகவும் மோச மான நிலையில் உள்ளது. இங்கு புதிய தார்ச் சாலை அமைத்து தர வேண்டும். மேலும் உட னடியாக கிராம நிர்வாக அலுவலத்தை திறந்து, கிராம நிர்வாக அலுவலர் இங்கு தங்கி யிருந்து செயல்பட வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.