tamilnadu

தஞ்சை பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க கோரிக்கை

தஞ்சாவூர், அக்.22- தஞ்சை பழைய பேருந்து நிலை யத்தில், புதிதாக கட்டடம் கட்டப்பட்ட பிறகு, ஏற்கனவே கடை வைத்து இருந்த வர்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் கடைகளை ஒதுக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம், தஞ்சை அய்யாச்சாமி பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) தலைவர் ராஜா, சிஐடியு  மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு ஆகியோர் தலைமையில் வியா பாரிகள் அளித்துள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது, “தஞ்சை அய்யாச்சாமி பழைய பேருந்து நிலை யத்தில் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் உள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள 57 கடைகளை எங்க ளது சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் தஞ்சா வூர் நகராட்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்நிலையில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை, இடித்து புதுப் பிக்க இருப்பதாக கூறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் 150 குடும்பங்கள் வருமானம் இன்றியும், வாழ வழி யின்றியும் தவித்து வருகிறோம். எனவே மேற்படி இடத்தில் புதிதாக கட்டப்படும் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் எங்க ளுக்கு முன்னுரிமை அளித்து கடை களை ஒதுக்கீடு செய்ய உரிய உத்தர வுகளை பிறப்பிக்க வேண்டும்” என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.