tamilnadu

தோகூர் பகுதி தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை

 தஞ்சாவூர், டிச.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்லணை- தோப்பூர் பகுதி கிளைக் கூட்டம் செயலாளர் எம்.அகிலா தலைமையில் நடை பெற்றது. சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, எம்.சம்சுதீன், எம்.ரமேஷ், எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “தோகூர் பேப்பர் மில் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகள் மழை யில் சேதமடைந்து ஆபத் தான நிலையில் உள்ளது. எனவே, இந்த தொகுப்பு வீடு களை பழுது நீக்கம் செய்து தர வேண்டும். தோகூரி லிருந்து வேங்கூர் வரை தார்ச்சாலை பழுதடைந்தும், சாலையின் இருபுறமும் மர ணக் குழியாகவும் உள்ளது. உடனே அவற்றை சரி செய்து தர வேண்டும். தோகூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை சுற்றுலாத் தலத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அவற்றை இடம் மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.