தஞ்சாவூர், ஜூன் 7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் சலவைத் தொழிலாளர்கள் 68 பேர் குடும் பங்களுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான நிவா ரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. பேராவூ ரணி பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக நிர்வாகியுமான என்.அசோக்குமார், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக் கப்பட்டுள்ள, சலவைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட் களை வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக முன்னாள் ஒன்றி யச் செயலாளர் சுப.சேகர், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத், சலவைத் தொழி லாளர்கள் சங்கத் தலைவர் நீலமோகன் கலந்து கொண்டனர். கொரோனா தொடக் கம் முதல் இதுவரை சுமார் ரூ 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை, திமுக பிரமுகர் என்.அசோக்குமார் தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கி உள்ளார்.