அறந்தாங்கி, மே 21- ஊரடங்கால் வேலையிழந்து தவித்து வரும் 160 க்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு அரிசி பை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி அறந்தாங்கியில் நடை பெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் தங்க துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் கவிவர்மன் முன்னிலை வகித்து அரிசிப்பை மற்றும் காய்கறி களை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் ஆதிமோ கனக்குமார், ரோட்டரி சங்க நிர்வா கிகள் கராத்தே கண்ணையன், ஜனதா கண்ணன், எஸ்.சிவராமன், சண்முகவேல், முருகேசன், புவனா செந்தில், ஆத்மா மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.