tamilnadu

பேராவூரணியில் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு

தஞ்சாவூர், ஆக. 2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகு தியில் வணிக நிறுவனங்கள், கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அர சுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இப்பகுதியில், கொரோ னாத் தொற்று அதிகளவில் பரவி வருவதால், ஆக.3 (திங்கள்கிழமை) முதல் பால், மருந்து கடைகள் தவி ர்த்து, அனைத்து கடைக ளும் காலை 6 முதல் மதியம்  2 மணி வரை மட்டுமே செய ல்படும். ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கி ழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த  அறிவிப்பு மாவட்ட ஆட்சிய ரின் மறு உத்தரவு வரும் வரை  அமலில் இருக்கும் என வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், காவ ல்துறை ஆய்வாளர் பெயரில்  வாகனம் மூலம் அறிவிப்பு  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.